Friday, May 22, 2015

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் திருவுருவச் சிலைகளுக்கு, மலர்தூவி மரியாதை செலுத்தினார் மக்களின் முதல்வர் ஜெயலலிதா – வரவேற்பு பதாகைகள், கொடி, தோரணங்களுடன் விழாக்கோலம்

By
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான செல்வி ஜெயலலிதா, இன்று சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., பேரறிஞர் அண்ணா, அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னையில் இன்று நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், கழகப் பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான செல்வி ஜெ ஜெயலலிதா, சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, ஆளுநர் டாக்டர் ரோசய்யா, செல்வி ஜெயலலிதாவை ஆட்சி அமைக்கும்படி அழைப்பு விடுத்தார். இதையடுத்து, ஆளுநரை சந்திக்க புறப்பட்ட செல்வி ஜெயலலிதாவுக்கு, கழகத் தொண்டர்களும், மகளிர் அணியினரும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 2 ஆயிரத்து 500 பெண்கள் முளைப்பாரி ஏந்தியபடி வாழ்த்து தெரிவித்ததோடு, செண்டைமேளம், தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆளுநரை சந்தித்துவிட்டு புறப்பட்ட செல்வி ஜெயலலிதா, சென்னை, அண்ணாசாலை, ஸ்பென்சர் அருகே அமைந்துள்ள கழக நிறுவனத் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, அண்ணாசாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலையின் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு, கழகப் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு, செல்வி ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில், சென்னை அண்ணாசாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கடற்கரை சாலை, காந்தி மண்டபம் சாலை, ராயப்பேட்டை, அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையின் இருமருங்கிலும் அ.இ.அ.தி.மு.க. கொடிகள், இரட்டை இலை தோரணங்கள், வரவேற்பு வளைவுகள் ஆகியன அழகுற அமைக்கப்பட்டிருந்தன. பிரம்மாண்டமான பதாகைகளும் இடம்பெற்றுள்ளன. முன்னதாக செல்வி ஜெயலலிதாவுக்கு, தாரை தப்பட்டை, செண்டை மேளம் உள்ளிட்ட இசைக்கருவிகள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment