Wednesday, May 18, 2016

கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன் வாக்களிப்பதை எட்டிப்பார்த்த எம்.எல்.ஏ. மீது வழக்கு

By
கடந்த 16-ந் தேதி, கேரள சட்டசபை தேர்தல் நடந்தபோது, அம்பலப்புழா சட்டசபை தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் முன்னாள் முதல்-மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் வாக்களித்தார். அப்போது, அவர் வாக்களித்த மறைப்புக்கு அருகே அச்சுதானந்தனின் மகன் அருண் குமாரும், அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வும், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருமான ஜி.சுதாகரனும் நின்று கொண்டிருந்தனர்.
சுதாகரன், மறைப்பைத் தாண்டி, அச்சுதானந்தன் வாக்களிப்பதை எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுக்கூர், தேர்தல் கமிஷனில் புகார் செய்தார். அதை ஏற்று, மாநில தலைமை தேர்தல் அதிகாரி இ.கே.மஜி உத்தரவின்பேரில், சுதாகரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும் சுதாகரன் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment