Friday, May 22, 2015

கழக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான 29 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியல் – நாளை பதவியேற்பு விழா

By
மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான 29 பேர் கொண்ட அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள செல்வி ஜெயலலிதா, காவல், உள்துறை, பொதுத்துறை உள்ளிட்ட இலாகாக்களை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள செல்வி ஜெ ஜெயலலிதா, பொதுத்துறை, IAS, IPS, IFS, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை, உள்துறை ஆகிய இலாகாக்களை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரு. ஓ. பன்னீர்செல்வத்திற்கு நிதி மற்றும் பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. திரு. நத்தம் ஆர். விஸ்வநாதன், மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராகவும், திரு. ஆர். வைத்திலிங்கம் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, வேளாண்துறை அமைச்சராகவும், திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் மற்றும் வனத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்கவுள்ளனர்.
திரு. ப. மோகன், ஊரக தொழில் மற்றும் தொழிலாளர் நலன், திருமதி பா. வளர்மதி, சமூக நலம், சத்துணவு மற்றும் மதிய உணவு, திரு. பி. பழனியப்பன் உயர்கல்வித்துறை, திரு. செல்லூர் கே. ராஜு, கூட்டுறவுத்துறை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திரு. ஆர். காமராஜுக்கு உணவு, இந்து சமய அறநிலையத்துறை இலாகாக்களும், திரு. பி. தங்கமணிக்கு தொழில்துறையும், திரு. வி. செந்தில்பாலாஜிக்கு போக்குவரத்துத்துறையும், திரு. எம்.சி. சம்பத்துக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
திரு. எஸ்.பி. வேலுமணிக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம் – நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலை துறைகளையும் – திரு. டி.கே.எம். சின்னையாவுக்கு கால்நடைப் பராமரிப்புத்துறையும், திருமதி எஸ். கோகுலஇந்திராவுக்கு கைத்தறி மற்றும் ஜவுளித்துறையும், டாக்டர் எஸ். சுந்தர்ராஜுக்கு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திரு. எஸ்.பி. சண்முகநாதன் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், திரு. என். சுப்பிரமணியன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும், திரு. கே.ஏ. ஜெயபால் மீன்வளத்துறை அமைச்சராகவும், திரு. முக்கூர் என். சுப்பிரமணியன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும், திரு. R.B. உதயகுமார் வருவாய்த்துறை அமைச்சராகவும், திரு. K.T. ராஜேந்திரபாலாஜி செய்தி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராகவும், திரு. B.V. ரமணா, பால் வளத்துறை அமைச்சராகவும், திரு. K.C. வீரமணி பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகவும், திரு. தோப்பு N.D. வெங்கடாசலம், சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும், திரு. T.P. பூனாட்சி கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சராகவும், திரு. எஸ். அப்துல் ரஹீம், பிற்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும், டாக்டர் சி. விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்கவுள்ளனர்.

0 comments:

Post a Comment