கொழும்பு, கொம்பனித் தெருவிலுள்ள பஸ் நிலையமொன்றில் ஒருவர் தாக்கி, கொலைசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 02, வொக்ஸ்ஷோல் வீதியைச் சேர்ந்த 30 வயதான ஒருவரே கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாக்குவாதம் வலுப்பெற்றதில், நேற்றிரவு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 45 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரை கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று (12) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment