Saturday, April 11, 2015

போலி விசா மூலம் பயணித்த இலங்கையர் நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்டார்

By
போலி விசா மூலம் குவைத்திலிருந்து இத்தாலி நோக்கிப் பயணிக்க முயற்சித்த இலங்கையர் நாட்டிற்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.
குவைத் விமான நிலைய பொலிஸாரால் சந்தேகநபர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட சந்தர்ப்பத்தில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயதான ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
கைதான சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment