
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புலி’. படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத். ஒளிப்பதிவு நட்ராஜ். இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவின் அடர்ந்த காட்டுபகுதியில் நடந்துவருகிறது.
சமீபத்தில் தான் ஆந்திர மாநிலம் சேஷமலையில் செம்மரம் கடத்தியதாக கூறி 20 தமிழர்கள் சுட்டுகொல்லப்பட்டனர் . இதனால் தமிழகத்திலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் முழுமையான சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. கடந்த 10 நாட்களாக விஜய்யின் புலி பட டீம் அங்கே தங்கி படப்பிடிப்புகளை நடத்தி வருகின்றனர். எப்போதும் படப்பிடிப்பு வாகனங்களை சோதனை செய்யாத போலீசார். நேற்று அவ்வழியாக கடந்து சென்ற ’புலி’ பட வாகனங்களை சோதனை செய்துள்ளனர். மேலும் நேற்று படப்பிடிப்பு தளத்தில் ஆயுதம் தாங்கிய 30 போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழ் சினிமா படப்பிடிப்பு என்பதால், தமிழ் மொழி மட்டுமே தெரிந்த செம்மர கடத்தல்காரர்கள் இவர்களுடன் கலந்து இருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்தனர். எனவே தான் சோதனை செய்யவேண்டியிருந்தது என கூறியுள்ளனர். இதனால் படப்பிடிப்பு பகுதியில் பரபரப்பு நிலவியது. பரபரப்பான சூழ்நிலையிலும் சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. படப்பிடிப்பு தாமதம் ஆனதால் இந்த வேளையில் ஸ்ருதி ஹாசன் திருப்பதியிக்கு சென்று வந்துள்ளார்.

0 comments:
Post a Comment